ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Monday, August 24, 2009

குரங்கும் முதலையும் (The Crocodile and The Monkey)

நதி சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாவல் பழம் மரம் தன்னிடத்தே பழங்களை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு குரங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பழங்களைத் தின்று கொட்டைகளைத் துப்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு முதலை வந்தது. மேலே இருந்த குரங்கு முதலைக்கும் கொடுத்துச் சாப்பிட நினைத்து, "முதலையாரே! ஏன் களைப்பாக இருக்கிறாய்? இந்த நாவல் பழம் தின்று பார், நல்ல சுவையுடன் இனிப்பாக இருக்கும், உடல் மிக தெம்பாக ஆகும்" என்றது. முதலையும் அவைகளைத் தின்றுவிட்டு பின் நன்றி தெரிவித்த்து. அன்றிலிருந்து அது தினமும் வர, குரங்குடன் நட்பு கொண்டது. ஒரு நாள் அந்த முதலை தன் மனைவிக்கும் பல நாவற்பழங்கள் எடுத்துச்சென்றது. "ஆஹா என்ன் தித்திப்பு! எங்கிருந்து கொண்டு வந்தாய்? என்றது பெண் முதலை.
"ஒரு மரத்திலிருந்து தான்"

"கீழே விழுந்தவைகளைப் பொறுக்கினாயா? மண்ணாக இருக்குமே"

மரம் ஏறினாயா? உன்னால் எப்படி மரம் ஏற முடியும்? நீ எப்படி மரம் ஏறினாய்?"

"நான் ஏறவில்லை, என் குரங்கு நண்பன் பறித்துக்கொடுத்தான். அவன் மரத்திலிருந்து புதுப்ப்ழங்களாகப் பறித்துப் போட்டான்"

"ஓ! அதுதான் நீ தினமும் நாழி கழித்து வீடு வருகிறாயா? அது சரி, இந்தப்ப்ழம் இத்தனை ருசியாக இருக்கிறதே, இதைத் தின்னும் அந்தக் குரங்கின் மாமிசம் எத்தனை ருசியாக இருக்கும்? அதன் இதயம் எத்தனை இனிப்பாக இருக்கும்? எனக்கு அந்த நண்பனின் இதயம் நிச்சயம் வேண்டும். அதை ருசி பார்க்கும் ஆசை எனக்கு வந்து விட்டது"

"அவன் என் நண்பன், அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்"

"எனக்கு அது கிடைக்கவில்லை என்றால் நான் பட்டினி கிடப்பேன். எனக்கு அதைக் கொண்டு வந்து தரவேண்டும்"

ஆண் முதலை எத்தனை சொல்லியும் கேட்காமல் பெண் முதலை பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் முதலை தன் நண்பனிடம் சென்றது. பின் குரங்கிடம் "அருமை நண்பா, என் மனைவி உன்னைக் காண விரும்புகிறாள், என் வீட்டிற்கு வாயேன்" என்றது.

குரங்கும், "நான் வர ரெடிதான், ஆனால் என்னால் நதியில் நீந்த முடியாது, மூழ்கிப் போய்விடுவேனே" என்றது.

அதற்கு முதலை "கவலைப்படாதே, நான் இருக்கும் போது என்ன கவலை? என் முதுகில் ஏறி அமர்ந்துக்கொள், நாங்கள் நிலத்திலும் இருப்போம், நீரிலும் இருப்போம். என் மனைவிக்கு நாகப்பழங்கள் மட்டும் பறித்து பின் என் முதுகில் ஏறிக்கொள்"இப்படியாக குரங்கு முதலையின் முதுகில் மஜவாக வலம் வர, முதலையும் நிலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்ட பின் சொல்லியது, "நண்பா, என் மனைவிக்கு உன் இதயம் வேண்டுமாம், நாவற்பழத்தின் ருசி இதய்த்திலும் இருக்கும் என்று எண்ணி அதைக் க்டித்துத் தின்ன ஆசைப்படுகிறாள், அதனால் தான் உன்னை அழைத்து வந்தேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை, உண்மை இதுதான். அவள் ஆசைக்கு எதிராக எனக்கு ஒன்றும் பேச முடியவில்லை"

ஒரு நிமிடம் குரங்கு ஆடிப்போனாலும் சமாளித்து தன் புத்தியைத் தீட்டியது, பின் சொல்லியது, "அருமை நண்பா! உன் மனைவிக்கு என் இதயம் தர நான் தயார் தான். ஆனால் இப்போது அது என்னிடம் இல்லை. நான் என் இதயத்தைக் கழட்டி மரத்தில் வைத்துவிட்டு வ்ந்திருக்கிறேன். நான் வெளியில் போகும் போது அதை மரத்தில் அவிழ்த்து வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. என்னைத் திருமப மரத்திற்கு அழைத்துப்போ, அதை நான் உனக்கே தருகிறேன்'

முட்டாள் முதலையும் இதை நம்பி குரங்கை மரத்தின் அடியில் அழைத்துப் போயிற்று. அவ்வளவு தான், ஒரே ஜம்ப் , மரத்தின் உச்சிக்குப் போய் விட்டது குரங்கு, "அட முட்டாளே! யாராவது இதயத்தை எடுத்துவிட்டு உயிருடன் இருக்க முடியுமா? போ, போ, உன் வீடு போய்ச் சேர், நண்பனாக இருந்து துரோகம் செய்யத் துணிந்தாயே," என்றது.

முதலையும் ஏமாற்றத்துடன் தன் வீடு திரும்பியது.


The Crocodile and The Monkey


Friday, August 21, 2009

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

வீதி தோறும் குல்லாதான் வித்து வந்தான் வியாபாரி

அலைஞ்ச களைப்புத் தீரவே பத்து நிமிடம் தூங்கினான்

கொஞ்ச நேரம் போனது குரங்கு கூட்டம் சேர்ந்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்தாய் எடுத்தது

குல்லாய் எடுத்த குரங்கது குதிச்சு குதிச்சு ஆடுது

கண்ணயர்ந்த வியாபாரி கண்விழித்து பார்த்தானே

குல்லாய் இன்றி போகவே குரங்கை நோக்கி ஓடினான்

என்ன செய்தும் குரங்கது குல்லாய் தர மறுத்தது

சற்று நேரம் யோசித்தான் சரியான வழி கிடைத்தது

தலையில் இருந்த குல்லாயை குரங்கை நோக்கி வீசினான்

குல்லா கண்ட குரங்கது கோபத்துடன் பார்த்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்து எரிந்தது

குல்லாய் எடுத்த வியாபாரி குரங்கை விடுத்து ஓடினான்

Friday, August 14, 2009

இந்திய நாடு நம் நாடு..ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (x 2)

ஈஸ்வர அல்லா தேரே நாம்
சபுகோ சன்மதி தே பகவான் (x2) (ரகுபதி...)

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (*2)
ரகுபதி ராகவ ராஜா ராம, கரதே ஸபகா காம தமாம
ஸரபஂச,ஏம.ஏல.ஏ.யா ஏம.பீ குச தோ முஜே பநா பகவாந ॥
ஏக பார திலவாதே குர்ஸீ ,பிர ஸபகீ கரவா தூஂ குர்கீ
முஜகோ பீ ரோஜகார மிலேகா,தேரா காரோபார சலேகா
ஜோ பீ ஆதா தேரீ காதா, சூஂஸ-சூஂஸ ஜநதா கோ காதா
நேதாஓஂ கே பாரே கொதாம,காம கரேஂ ந ஏக சதாம
உஸநே ஸபகோ தியா ஹை தோகா, முஜகோ பீ தோ தே தே மௌகா
ஸப ஆஸ்வாஸந தேரே நாம,ரகுபதி ராகவ ராஜா ராம....॥
காஂதீ தேரா லேகர நாம,கூப கியா ஜக மேஂ பதநாம
ரிஸ்வத கோரோஂ கா ஹை மோல, ஸச போலோ தோ பிஸ்தர கோல
கோடாலோஂ பர ஜாஂச கா தாலா, குர்ஸீ தேரா கேல நிராலா
குர்ஸீ மைய்யா குர்ஸீ பாப,மந மைல பர குர்தா ஸாப
பூரே கர மேரே அரமாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥
அஂதேர நகரீ சோபட ராஜா, அப தோ பஜா தே உநகா பாஜா
காயா அப தக ஜிதநா உஸநே ,பூரா நஹீஂ திலாதே ஆதா
பூக கரீபீ ஔர கஂகாலீ ஜைஸே நேதா ஜீ கீ ஸாலீ
பூகே பஜந ந ஹோய கோபாலா, தேரீ பஸல கா கயா லாலா
அப தோ ஸுந லோ ஸ்ரீ பகவாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥

சுகந்திர தின வாழ்த்துகள்

Tuesday, August 11, 2009

தமிழ்குழந்தை பாடல்கள்

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

**************************************************************

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

************************************************************

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

*********************************************************

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

**********************************************************

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி
*******************************************************
குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.

தமிழ்குழந்தை பாடல்கள்
***********************************************************

Monday, August 10, 2009

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது வெள்ளை பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளை பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி

முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி

Monday, August 3, 2009

பூச்சாண்டி