Harshini Dance Show may 8th 2010- Dallas
Monday, May 17, 2010
Saturday, May 8, 2010
அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா
எல்லாருக்கும் அம்மாவை பிடிக்கும் ஹர்ஷினிக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்...அவ அம்மா மாதிரியேன்னு யாராவது சொல்லிட்டா ரொம்ப சந்தோசம் படுவா... ஆனா அவ அப்பா மாதிரியே தான் :-) .............ஹர்ஷினி இந்த வருடம் அவ பள்ளியில் எனக்கா செய்து வந்த கிப்ட்ஸ்..ஒரு பென்சில் ஸ்டேண்டும், ஒரு வாழ்த்து அட்டையும்...
பென்சில் ஸ்டேண்ட் :-
ஒரு நாள் தக்காளி சாஸ் டின் வேணும்னு அடம்பிடித்து ஸ்குலுக்கு எடுத்துட்டு போன நேத்து பாத்தா அது ஒரு அழகிய பென்சில் ஸ்டேண்டா வந்துருக்கு. அதில் அவளுடைய சின்ன சின்ன படங்கள் எல்லாம் ஒட்டி ரொம்ப அழகா இருந்தது.
வாழ்த்து அட்டை:-
போன வாரம் அவ ஒம்வார்க் கதவில் இருந்த்து எத்தனை அடி தூரத்தில் பிரிஜ் இருக்கிறது என அவளுடைய கால் அடியை கவுண்ட் செய்ய சொல்லி வந்தது...அதையே என் வெயிட்டாக போட்டு இருந்தது எனக்கு சந்தோசம் என்னா 20 பவுண்ட் தானாம் :-)
இந்த வருடமும் விலைமதிக்க முடியாத பரிசுகள்...இன்னும் நாளைக்கும் தொடரும்...
எல்லாம் குடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்
...............................................
Subscribe to:
Posts (Atom)