ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, February 28, 2009

@.சின்னஞ் சிறு கிளியேசின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!


உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!

என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ...

Thursday, February 26, 2009

Wednesday, February 25, 2009

@.ஓடி விளையாடு பாப்பாஓடி விளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்க படுத்தி கொள்ளு பாப்பா

@.பொம்மை பொம்மை

என் பொம்மு குட்டிக்காக ஒரு பொம்மை பாடல்.

அவளுக்கு பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்.
எப்பொதும் எதாவது பாடிட்டேதான் இருப்பா.
அவளுக்காக இந்த முறை ஊருக்கு போகும் போது நிறைய தமிழ் பாடல்கள் எல்லாம் கத்துக்க வேண்டியதா இருந்தது :-), இந்த பாடல் அவ ஆடிட்டே பாடினா பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும் இதோ அதில் இருந்து ...


பொம்மை பொம்மை பொம்மை பார்!

புதிய புதுய பொம்மை பார்!

கையை வீசும் பொம்மை பார்!

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்!

தலையை ஆட்டும் பொம்மை பார்!

தாளம் போடும் பொம்மை பார்!

எனக்குக் கிடைத்த பொம்மை போல்!

எதுவும் இல்லை உலகிலே!

@.மாம்பழமாம் மாம்பழம்மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்

Tuesday, February 24, 2009

@.கைவீ சம்மா கைவீசு
கைவீ சம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!

சொக்காய் வாங்கலாம் கைவீசு!
சொகுசாய்ப் போடலாம் கைவீசு!
கோயிலுக்குப் போகலாம் கைவீசு!
கும்பிட்டு வரலாம் கைவீசு!

@.அம்மா இங்கே வா வா
அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போல நல்லார்

ஊரில் யாரும் இல்லை

என்னால் உனக்குத்தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றிச் சொல்வேன்

ஒற்றுமை என்றும் உயர்வாம்

ஓதும் செயலே நலமாம்

ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.

@.நிலா நிலா ஓடிவாநிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

@.தோசையம்மா தோசைதோசையம்மா தோசை;

அம்மா சுட்ட தோசை;

அரிசி மாவும் உளுந்த மாவும்

கலந்து சுட்ட தோசை;

அப்பாவுக்கு நாலு;

அம்மாவுக்கு மூணு;

அண்ணனுக்கு ரெண்டு;

பாப்பாவுக்கு ஒண்ணு;

தின்னத் தின்ன ஆசை

திருப்பிக் கேட்டா பூசை.

@ .அணிலே அணிலே


அணிலே அணிலே ஓடி வா

அழகிய அணிலே ஓடி வா;

கொய்யா மரம் ஏறி வா

குண்டுப்பழம் கொண்டு வா;

பாதிப்பழம் உன்னிடம்

மீதிப் பழம் என்னிடம்;

கூடிக்கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்