ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, February 28, 2009

@.சின்னஞ் சிறு கிளியேசின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!


உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!

என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ...

2 comments:

MayVee said...

nalla irukku

Mrs.Menagasathia said...

ஹாய் இந்த பாடலின் மூலம் பாரதியாரை ஞாபகப்படுத்திட்டிங்க.இந்த ப்ளாக் யூ டியுப் மூலம் ரொம்ப நல்லாயிருக்கு ஹர்ஷினி அம்மா.