ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Friday, May 29, 2009

Twinkle Twinkle

ஹர்ஷினிக்கு மட்டும் இல்லை எங்கள் அனைவருக்கும் பிடித்த இந்த பாடல் ... ரேவதி சங்கர் ரொம்ப நல்லா பன்னி இருப்பாங்க.... இதை பாத்த பின் ஹர்ஷினியும் எல்லா பாடலையும் மாத்தி பாட ஆரம்பிச்சுட்டா :-)

Wednesday, May 13, 2009

@.ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு முகத்தில் கண் இரண்டு

மூன்று முக்காலிக்குக் கால் மூன்று

நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு

ஐந்த் ஒருகை விரல் ஐந்து

ஆறு ஈயின் கால் ஆறு

ஏழு வாரத்தின் நாள் ஏழு

எட்டு சிலந்தியின் கால் எட்டு

ஒன்பது தானியம் வகை ஒன்பது

பத்து இருகை விரல் பத்து

Saturday, May 9, 2009

அம்மாக்காக ஒரு நாள்ஹர்ஷினி எனக்கு குடுத்த பரிசுக்கள்... எல்லாமே அவளே பன்னியது.


நான் அம்மா ஆனா பிறகு என் அம்மாவை எனக்கு அதிகமாக பிடிக்கும்..

நான் சிறு வயதில் செய்த குறும்பை அதட்டிய அம்மா...!

ஹர்ஷினி செய்யும் குறும்பை ரசிக்கும் போது என் அம்மாவை இன்னும் ரொம்ப பிடிக்கும்.

ஹர்ஷினி இந்த வாரம் முழுவதும் எனக்காக எதாவது கிப்ட் செய்துட்டு வருவாள்

அவள் பிஞ்சு கைகளால் எனக்கே எனக்காக என அவள் பன்னி வரும் எல்லாமே எனக்கு கிடைத்த விளை மதிக்க முடியாத பொக்கிசங்கள்

அதை என்னிடம் கொடுத்து I LOVE MOM -ன்னு சொல்லும்போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வரும்

என்னை இப்போது இங்கு மட்டும் இல்லாமல் நிறைய இடங்களில் ஹர்ஷினி அம்மா எனவே என் பெயர் ஆகிவிட்டது :-)

ஹர்ஷினி அடிக்கடி சொல்லுவா ” நான் அம்மா மாதிரியே” -ன்னு .

அம்மாக்களின் நாளில் நான் என் அம்மாவையும், ஹர்ஷினியையும் எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல பல.