ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, May 9, 2009

அம்மாக்காக ஒரு நாள்ஹர்ஷினி எனக்கு குடுத்த பரிசுக்கள்... எல்லாமே அவளே பன்னியது.


நான் அம்மா ஆனா பிறகு என் அம்மாவை எனக்கு அதிகமாக பிடிக்கும்..

நான் சிறு வயதில் செய்த குறும்பை அதட்டிய அம்மா...!

ஹர்ஷினி செய்யும் குறும்பை ரசிக்கும் போது என் அம்மாவை இன்னும் ரொம்ப பிடிக்கும்.

ஹர்ஷினி இந்த வாரம் முழுவதும் எனக்காக எதாவது கிப்ட் செய்துட்டு வருவாள்

அவள் பிஞ்சு கைகளால் எனக்கே எனக்காக என அவள் பன்னி வரும் எல்லாமே எனக்கு கிடைத்த விளை மதிக்க முடியாத பொக்கிசங்கள்

அதை என்னிடம் கொடுத்து I LOVE MOM -ன்னு சொல்லும்போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வரும்

என்னை இப்போது இங்கு மட்டும் இல்லாமல் நிறைய இடங்களில் ஹர்ஷினி அம்மா எனவே என் பெயர் ஆகிவிட்டது :-)

ஹர்ஷினி அடிக்கடி சொல்லுவா ” நான் அம்மா மாதிரியே” -ன்னு .

அம்மாக்களின் நாளில் நான் என் அம்மாவையும், ஹர்ஷினியையும் எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல பல.

2 comments:

selva kumar said...

very good...
happy to hear all this....
really u had grown due to harshini...
bye to harshini amma..... :-)

ஹர்ஷினி அம்மா - said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வ குமார் :-)