ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Tuesday, March 31, 2009

அலைபாயுதே கண்ணா....


அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்(அலைபாயுதே....)


நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று(நிலை....)


நேரமாவதறியாமலே மிக வினோதமாக
முரளீதரா என் மனம் (அலைபாயுதே கண்ணா....)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே -
உன்திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே(கனிந்த....)

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே(கண்கள்....)

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா(கதித்த...)

உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா(உருக்களித்த....)

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ(கரைகடல்....)

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ(கதறி....)

இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ(இது தகுமோ....)

குழலூதிடும் பொழுடு ஆறிடும் குறைகள் போலவே மனதில்வேதனை மிகவுற
(அலைபாயுதே......)

காக்கைச் சிறகினிலே....
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கை)

Monday, March 23, 2009

Barney Song

இது ஹர்ஷினிக்கு ரொம்ப பிடித்த பாடல் எப்பவும் வந்து பாடிட்டே கட்டிபிடிப்பா, சில நேரம் துங்கும்போதும் இந்த பாட்டை பாட சொல்லுவா, அவளுக்கு 10 மாதத்தில் இருந்து இன்னும் பிடிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

I love you
You love me
We're a happy family
With a great big hug
And a kiss from me to you
Won't you say you love me too?

I love you
You love me
We're best friends
Like friends should be
With a great big hug
And a kiss from me to you
Won't you say you love me too?தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

Friday, March 13, 2009

நல்லதோர் வீணை செய்தே.....

Get this widget | Track details | eSnips Social DNAநல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

(நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

(நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ (2)

(நல்லதோர்)

Wednesday, March 4, 2009

ஹர்ஷினி Dance

ஹர்ஷினிக்கு இரண்டு வருடம் 6 மாதம் ஆனதும் பெங்களுரீல் இருக்கும் ஒரு பிலே ஸ்குலுக்கு 4 மாதம் போனாள். அதுதான் ஹர்ஷினிக்கு முதல் ஸ்குல் அனுபவம், அப்ப எங்க வீட்டுலேயும் ஒரு அபியும் நானும், மாதிரி ஹர்ஷினியும் நாங்கலும் போன கதை வேற...... ஆன அவ ஸ்குல் ரொம்ப எஞ்சாய் பன்னினா.. usa - லே இருந்து அங்கு போகும் போது சரியா பேச கூட தெரியாது அவளுக்கு ஆனா அப்பறம் நடந்த ஸ்குல் டேயில் அவ மேடையில் ஏறியதும் எங்கள் கண்கள் கலங்கிவிட்டன.அவ எங்களை பார்த்தால் மேடையில் இருந்து இறங்கி வந்துவிடுவால் என எங்களை மறைந்து இருந்து பாக்க சொன்னாங்க ...ஆனா அவ எங்களை பாத்துட்டா...எங்களுக்கு ஒரே சந்தோசம் தாங்கலே..ஆனா அவ இப்பவும் கேப்பா ”ஏம்மமா என்னை பாத்து அழுதீங்க”ன்னு....:-)


இதோ நீங்களும் பாருங்க ஹர்ஷினியை.