ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Friday, March 13, 2009

நல்லதோர் வீணை செய்தே.....

Get this widget | Track details | eSnips Social DNAநல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

(நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

(நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ (2)

(நல்லதோர்)

3 comments:

Mrs.Menagasathia said...

குட்டிப்பாப்பா ரொம்ப அழகாஇருக்காங்க.பாரதியார் பாடலும் கேட்க இனிமையா இருக்கு!!

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி மேனகா :-)

இலா said...

சூப்பர் ஹாஷினி! எனக்கு ரொம்ப பிடித்த பாடல். முடிந்தால் நானும் ஈ-ஸ்னிப்ஸ்ல இன்னும் ஏத்தி விடுறேன் கேளுங்க