அப்பாகள் நாள் வந்ததும் ஹர்ஷினி அவ அப்பாவுக்கு எதாவது கிராப்ட் பன்னி குடுக்க வேண்டும்னு ஒரே அடம்.... ஏன்னா அம்மாகளின் நாளுக்கு ஸ்குலில் ஒரு வாரம் முழுவதும் இதே வேளை தான்...சரின்னு அதே மாதிரி ஒரு போட்டோ பிரேமும், டிசர்ட் பெயிண்டிங்கும் பன்னினாள்.
ஹர்ஷினி அப்பாவுக்கு அந்த டிசர்ட்டை பார்த்ததும் ரொம்ப பிடித்து விட்டது.... பார்க்கும் எல்லாரிடமும் ஹர்ஷினி எனக்கு அவளே பன்னினதுன்னு ஒரு படம் காட்டிட்டு இருக்காரு.
இதே ஹர்ஷினியின் கை வண்ணம்.
போட்டோ பிரேம்
முதலில் பிரேம் முழுவதும் ஒரு கலர் அடித்துவிட்டு பின் அதில் போம் பிரசில் கலர் செய்து அதில் பூக்கள் , பட்டாம்பூச்சி எல்லாம் ஒட்டிக்கொள்ளலாம்.
டிசர்ட் டிசைன்
ஹர்ஷினியிம் உள்ளங்கய்யில் போயிட் போட்டு அதை பதித்து அதை மீன் போல வரைந்து கலர் பன்னி இருக்கிறாள்.