ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, May 8, 2010

அம்மா அம்மா அம்மா


அம்மா அம்மா அம்மா

எல்லாருக்கும் அம்மாவை பிடிக்கும் ஹர்ஷினிக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்...அவ அம்மா மாதிரியேன்னு யாராவது சொல்லிட்டா ரொம்ப சந்தோசம் படுவா... ஆனா அவ அப்பா மாதிரியே தான் :-) .............ஹர்ஷினி இந்த வருடம் அவ பள்ளியில் எனக்கா செய்து வந்த கிப்ட்ஸ்..ஒரு பென்சில் ஸ்டேண்டும், ஒரு வாழ்த்து அட்டையும்...

பென்சில் ஸ்டேண்ட் :-
ஒரு நாள் தக்காளி சாஸ் டின் வேணும்னு அடம்பிடித்து ஸ்குலுக்கு எடுத்துட்டு போன நேத்து பாத்தா அது ஒரு அழகிய பென்சில் ஸ்டேண்டா வந்துருக்கு. அதில் அவளுடைய சின்ன சின்ன படங்கள் எல்லாம் ஒட்டி ரொம்ப அழகா இருந்தது.

வாழ்த்து அட்டை:-

போன வாரம் அவ ஒம்வார்க் கதவில் இருந்த்து எத்தனை அடி தூரத்தில் பிரிஜ் இருக்கிறது என அவளுடைய கால் அடியை கவுண்ட் செய்ய சொல்லி வந்தது...அதையே என் வெயிட்டாக போட்டு இருந்தது எனக்கு சந்தோசம் என்னா 20 பவுண்ட் தானாம் :-)
இந்த வருடமும் விலைமதிக்க முடியாத பரிசுகள்...இன்னும் நாளைக்கும் தொடரும்...


எல்லாம் குடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்

...............................................

4 comments:

asiya omar said...

ஹர்ஷினியின் கிஃப்ட் ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

//அவ அம்மா மாதிரியேன்னு யாராவது சொல்லிட்டா ரொம்ப சந்தோசம் படுவா//

குழந்தைகளின் சந்தோஷமே நமக்கு ஒரு டன் எனர்ஜியை தருமே!!

மனோ சாமிநாதன் said...

உலகிலேயே விகை மதிக்க முடியாத பொக்கிஷம் நம் மழலைக் குழந்தைகள் நமக்குத் தரும் அன்புப்பரிசுகள்தான்! நீங்களும் கொடுத்து வைத்தவர்தான்! உங்கள் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!

ஹர்ஷினி அம்மா said...

நன்றி ஆசியா அக்கா :-)

நன்றி ஜெய்லானி
//குழந்தைகளின் சந்தோஷமே நமக்கு ஒரு டன் எனர்ஜியை தருமே!!//

நிச்சயம்.


நன்றி மனோ மேடம் :-)