ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Monday, August 24, 2009

குரங்கும் முதலையும் (The Crocodile and The Monkey)

நதி சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாவல் பழம் மரம் தன்னிடத்தே பழங்களை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு குரங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பழங்களைத் தின்று கொட்டைகளைத் துப்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு முதலை வந்தது. மேலே இருந்த குரங்கு முதலைக்கும் கொடுத்துச் சாப்பிட நினைத்து, "முதலையாரே! ஏன் களைப்பாக இருக்கிறாய்? இந்த நாவல் பழம் தின்று பார், நல்ல சுவையுடன் இனிப்பாக இருக்கும், உடல் மிக தெம்பாக ஆகும்" என்றது. முதலையும் அவைகளைத் தின்றுவிட்டு பின் நன்றி தெரிவித்த்து. அன்றிலிருந்து அது தினமும் வர, குரங்குடன் நட்பு கொண்டது. ஒரு நாள் அந்த முதலை தன் மனைவிக்கும் பல நாவற்பழங்கள் எடுத்துச்சென்றது. "ஆஹா என்ன் தித்திப்பு! எங்கிருந்து கொண்டு வந்தாய்? என்றது பெண் முதலை.
"ஒரு மரத்திலிருந்து தான்"

"கீழே விழுந்தவைகளைப் பொறுக்கினாயா? மண்ணாக இருக்குமே"

மரம் ஏறினாயா? உன்னால் எப்படி மரம் ஏற முடியும்? நீ எப்படி மரம் ஏறினாய்?"

"நான் ஏறவில்லை, என் குரங்கு நண்பன் பறித்துக்கொடுத்தான். அவன் மரத்திலிருந்து புதுப்ப்ழங்களாகப் பறித்துப் போட்டான்"

"ஓ! அதுதான் நீ தினமும் நாழி கழித்து வீடு வருகிறாயா? அது சரி, இந்தப்ப்ழம் இத்தனை ருசியாக இருக்கிறதே, இதைத் தின்னும் அந்தக் குரங்கின் மாமிசம் எத்தனை ருசியாக இருக்கும்? அதன் இதயம் எத்தனை இனிப்பாக இருக்கும்? எனக்கு அந்த நண்பனின் இதயம் நிச்சயம் வேண்டும். அதை ருசி பார்க்கும் ஆசை எனக்கு வந்து விட்டது"

"அவன் என் நண்பன், அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்"

"எனக்கு அது கிடைக்கவில்லை என்றால் நான் பட்டினி கிடப்பேன். எனக்கு அதைக் கொண்டு வந்து தரவேண்டும்"

ஆண் முதலை எத்தனை சொல்லியும் கேட்காமல் பெண் முதலை பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் முதலை தன் நண்பனிடம் சென்றது. பின் குரங்கிடம் "அருமை நண்பா, என் மனைவி உன்னைக் காண விரும்புகிறாள், என் வீட்டிற்கு வாயேன்" என்றது.

குரங்கும், "நான் வர ரெடிதான், ஆனால் என்னால் நதியில் நீந்த முடியாது, மூழ்கிப் போய்விடுவேனே" என்றது.

அதற்கு முதலை "கவலைப்படாதே, நான் இருக்கும் போது என்ன கவலை? என் முதுகில் ஏறி அமர்ந்துக்கொள், நாங்கள் நிலத்திலும் இருப்போம், நீரிலும் இருப்போம். என் மனைவிக்கு நாகப்பழங்கள் மட்டும் பறித்து பின் என் முதுகில் ஏறிக்கொள்"



இப்படியாக குரங்கு முதலையின் முதுகில் மஜவாக வலம் வர, முதலையும் நிலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்ட பின் சொல்லியது, "நண்பா, என் மனைவிக்கு உன் இதயம் வேண்டுமாம், நாவற்பழத்தின் ருசி இதய்த்திலும் இருக்கும் என்று எண்ணி அதைக் க்டித்துத் தின்ன ஆசைப்படுகிறாள், அதனால் தான் உன்னை அழைத்து வந்தேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை, உண்மை இதுதான். அவள் ஆசைக்கு எதிராக எனக்கு ஒன்றும் பேச முடியவில்லை"

ஒரு நிமிடம் குரங்கு ஆடிப்போனாலும் சமாளித்து தன் புத்தியைத் தீட்டியது, பின் சொல்லியது, "அருமை நண்பா! உன் மனைவிக்கு என் இதயம் தர நான் தயார் தான். ஆனால் இப்போது அது என்னிடம் இல்லை. நான் என் இதயத்தைக் கழட்டி மரத்தில் வைத்துவிட்டு வ்ந்திருக்கிறேன். நான் வெளியில் போகும் போது அதை மரத்தில் அவிழ்த்து வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. என்னைத் திருமப மரத்திற்கு அழைத்துப்போ, அதை நான் உனக்கே தருகிறேன்'

முட்டாள் முதலையும் இதை நம்பி குரங்கை மரத்தின் அடியில் அழைத்துப் போயிற்று. அவ்வளவு தான், ஒரே ஜம்ப் , மரத்தின் உச்சிக்குப் போய் விட்டது குரங்கு, "அட முட்டாளே! யாராவது இதயத்தை எடுத்துவிட்டு உயிருடன் இருக்க முடியுமா? போ, போ, உன் வீடு போய்ச் சேர், நண்பனாக இருந்து துரோகம் செய்யத் துணிந்தாயே," என்றது.

முதலையும் ஏமாற்றத்துடன் தன் வீடு திரும்பியது.


The Crocodile and The Monkey


6 comments:

Sanjai Gandhi said...

அட.. விடியோவோட கதையா? சூப்பர்ங்க..

Malini's Signature said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SanjaiGandhi :-)

பெரியவங்க படிச்சு சின்ன குழந்தைகளுக்கு சொல்லி குடுக்கதான் இப்படி....குழந்தைகளுக்கு வீடியோவா பாத்த அந்த கதை அப்படியே மனதில் பதிந்துவிடும் இல்லையா???

Pavithra Elangovan said...

Wow video utan kadaai.. super...

butterfly Surya said...

அருமை.

RAMYA said...

கதை நல்லா இருக்குங்க அதையும் வீடியோவோட பதிவிட்டது அருமியாயான யோசனை:-)

ஹர்ஷினியை நான் மிகவும் கேட்டதா சொல்லுங்க!

பனித்துளி சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,

http://wwwrasigancom.blogspot.com/

shankarp071@gmail.com